அந்த 2 அமைச்சர்கள்…? ஏன் அதிக நிதி…? கேள்வி எழுப்பிய ஸ்டாலின்..!

14 February 2020, 4:11 pm
MKSTALIN-UPDATENEWS360
Quick Share

சென்னை: குறிப்பிட்ட 2 அமைச்சர்களின் துறைக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தகுதிநீக்க வழக்கில் உள்ள 11 எம்எல்ஏக்களில் ஒருவராக இருக்கும் ஓபிஎஸ், 10வது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டை ஓபிஎஸ் 196 நிமிடங்கள் வாசித்தார். இதில் கூட பாஜக அரசை அதிமுக பின்பற்றி வருகிறது.

மத்திய அரசை இந்த ஆட்சி பின்பற்றுவது என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரமே எடுத்துக் காட்டு. ஜெயலலிதா மறைந்த பிறகு தியானம் செய்து இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னவர் தான் இன்று மாறி உள்ளார்.

தவிர வேறு எதுவும் மாறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரிக்கிறது. திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது நான்கு லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோர் துறைகளுக்கு மட்டும் அதிகநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது ஏன் என்று புரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை எப்படி நிறைவேற்ற போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply