‘சபாஷ், அண்ணாமலை’… டெல்லியில் இருந்து வந்த திடீர் மெசேஜ்… குஷியில் தமிழக பாஜகவினர்…!!

Author: Babu Lakshmanan
27 May 2022, 2:07 pm
Quick Share

சென்னை : தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பியதை தொடர்ந்து, பாஜக தலைமையிடம் இருந்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரபரப்பு மெசேஜ் ஒன்று கிடைத்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக தலைவர்களை அதிமுகவை காட்டிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருகிறார். இப்படியிருக்க, திமுக ஆட்சியமைந்த பிறகும், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகும் முதல்முறையாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையம் மற்றும் ஐஎன்எஸ் கடற்கடை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டரங்கம் வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், வழி முழுவதும் பாஜக கொடி மற்றும் பேனர்களினால் அலங்கரிக்கப்பட்டதுடன், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்கால் ஆட்டம், என 25 விதமான முறையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு நிகராக, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தமுறை சென்னை வந்த பிரதமருக்கு, அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக தலைவர்கள் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தனர்.

இதனால், எழுந்த உற்சாக மிகுதியின் காரணமாகவே தனது பாதுகாப்பு வளையத்தையும் மீறி கார் கதவை சட்டென திறந்து, பாஜக தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தாகவும் சொல்லப்படுகிறது.

Image

அரசியலில் அனுபவமிக்கவர்கள் பாஜகவின் தலைவராக இருந்த போதே பிரதமர் மோடிக்கு தடபுடலான வரவேற்பை அளிக்க திட்டம் தீட்டுவது கடினமாf இருந்து வரும் நிலையில், அண்ணாமலை எப்படித்தான் சமாளிக்கப் போகிறாரோ..? என்று எண்ணிய சக தலைவர்களின் புருவத்தையே உயர்த்தச் செய்துள்ளார் அண்ணாமலை.

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு அக்கட்சியின் மேலிடத்துக்கு மன நிறைவை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தேசியத் தலைமையின் குட்புக்கில் அண்ணாமலைக்கு இடம் கிடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Views: - 571

0

0