துப்பாக்கி குண்டுகளுடன் விமானநிலையம் வந்த காங்கிரஸ் பிரமுகர்…விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்ததால் பரபரப்பு….!!

11 November 2020, 3:10 pm
mayura - updatenews360
Quick Share

சென்னை: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரமுகரால் பரபரப்பு விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து இன்று காலை கோவை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. இந்நிலையில், அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு படையினா் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.

அந்த விமானத்தில் கோவை செல்ல தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவா் மயூரா ஜெய்குமாா் என்பவரும் வந்திருந்தாா். அவருடைய கைப்பையை பாதுகாப்பு படையினா் பரிசோதித்தப்போது, அதிலிருந்து வெடி மருந்து இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.இதையடுத்து அதிா்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது கைப்பையை தனியே எடுத்து அதனை சோதனையிட்டனர்.

சோதனையின் போது, அவரது கைப்பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டு பாதுகாப்பு படையினர் அதிா்ச்சியடைந்தனா். மேலும், 7.5 mm ரகத்தை சோ்ந்த 17 துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, அவரிடம் நடத்திய விசாரணையில் எனக்கு துப்பாக்கி லைசென்ஸ் இருக்கிறது. இது அந்த துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டுகள் தான். நான் அவசரமாக புறப்பட்டு வந்ததால் தவறுதலாக குண்டுகள் இருந்த பையை மாற்றி எடுத்துவந்துவிட்டேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது துப்பாக்கி லைசென்ஸ் போன்றவைகளையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Views: - 28

0

0