பாஜகவை வீழ்த்த வியூகம் : எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நீடிக்குமா?

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 5:25 pm
Sonia Gandhi - Updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா டெல்லியில் இருந்தவாறு 19 கட்சித்தலைவர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அண்மையில் நாடாளுமன்றத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால் கிடைத்த உற்சாகத்தில் இந்தக் காணொலி கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த திட்டம் என்றும் கூறப்படுகிறது.

No alternative, need to come together for 2024: Sonia to Opposition | India  News,The Indian Express

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கலந்துரையாடலில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இதில் 2024-ல் நடைபெறும் தேர்தலை திட்டமிடுவதற்கான நேரம் நெருங்கி விட்டது எனவும் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளவேண்டும்” என வலியுறுத்தப்பட்டடது.

Sonia holds virtual meeting with leaders of 19 opposition parties | Sonia  Gandhi| Congress| Opposition meeting

ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் தந்ரிக் ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மதச்சார்பற்ற ஜனதா தளம், விசிக, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டு, மக்கள் ஜனநாயக கட்சி போன்றவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டு 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினர்” என்று அதில் கூறப்பட்டிருந்தது

ஒட்டுமொத்தமாக பங்கேற்ற கட்சிகளின் எண்ணிக்கை 19 என்றாலும்கூட அதில் சில கட்சிகளை கழித்து விடலாம். ஏனென்றால் தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருக்கின்றன. அதேபோல் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் உள்ளது.

Sonia Gandhi plans Opposition get-together, leaders to stage protest today  | India News,The Indian Express

மராட்டியத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் ஒரே அணியில் இருக்கின்றன. மேற்குவங்காளத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றாக உள்ளன.
கேரள காங்கிரஸ் கட்சியின் மாணி பிரிவு மார்க்சிஸ்ட் கூட்டணியில் இருக்கிறது.
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.

இப்படி சில கட்சிகளை கழித்துவிட்டால் உண்மையிலேயே கலந்துகொண்ட கட்சிகளின் எண்ணிக்கை 10, 11தான் வரும். ஏனென்றால் இவற்றில் சுமார் அரை டஜனுக்கும் மேலான கட்சிகள், தனித்துப் போட்டியிடும் திறன் இல்லாதவை. அதை ஒருபோதும் விரும்பாத கட்சிகள் என்றும் சொல்லலாம்.

Sonia Gandhi planning united opposition Mamata Uddhav Stalin meeting on  August 20 | India News – India TV

முலாயம் சிங்கின் சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் இந்த காணொலி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தான், கிராமப்புற பகுதியில் இருந்ததால் இணைய தள சேவை கிடைக்காமல் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க முடியவில்லை என்று சமாஜ்வாடியின் தலைவரும்,
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஒரு நொண்டிச் சாக்கை கூறியுள்ளார். இந்தியாவில் இணையதள வசதி இல்லாத ஒரு கிராமத்தில் அவர் இருக்கிறார் என்பதே வேடிக்கையாக உள்ளது..

ஆம் ஆத்மியோ எங்களை யாருமே அழைக்கவில்லை என்று நொந்து கொண்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார் என்கிறார்கள்.

No Truth In Sonia Writing Letter To KCR & Jagan

இவை தவிர பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர், காங்கிரஸ்,தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சிரோமணி அகாலி தளம், AIMIM என்று பல மாநிலங்களில் பிரதான கட்சிகள் உள்ளன.
இவற்றைக் கணக்கில் சேர்த்தார்களா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

இந்த கலந்துரையாடலின் போது ஒருமித்த சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.

  • அடுத்த ஆண்டு நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணையவேண்டும்.
  • இனி நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களிலும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
  • அடுத்த மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் 11 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவது.
  • காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அங்கு வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்தவேண்டும்.
  • சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய், பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும்.
  • கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட்டு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப் படுத்தவேண்டும்.
  • பள்ளிக் கூடங்களை திறக்க உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
  • பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் போராட்டத்தை முன்னெடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

இப்படி எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் விஷயத்தில் விடை கிடைக்காத கேள்விகளும் ஏராளம் உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேச தேர்தல் முடிவைப் பொறுத்தே
இந்தக் கூட்டணியில் இணைவதா? வேண்டாமா? என்ற முடிவை சமாஜ்வாடி எடுக்கும் என்கின்றனர்.

ஒருவேளை, மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடியின் தலைமையை ஏற்கும் நிலைக்கு காங்கிரசும் திரிணாமுல் காங்கிரசும் தள்ளப்படும். இதை 19 எதிர்க்கட்சிகளும் ஏற்குமா? என்பது தெரியவில்லை.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளும் ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்குமா? கேரளாவில் காங்கிரசை மார்க்சிஸ்ட் ஆதரிக்குமா? காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி மூன்றும் ஒரே அணியாக மாறுமா?…இவற்றையெல்லாம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்றால் பிரதமர் யார்? என்ற கேள்வி எழும்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற ஒரு சில கட்சிகளுக்கு ஓரிரு சதவீத செல்வாக்கு கூடியிருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் தெரிய வந்திருக்கிறது.
ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் இணைந்தால் கூட அது பாஜகவை வீழ்த்த உதவுமா? என்பது சந்தேகம்தான்.

Ban ads, scrap Rs 20,000 cr project: Full text of Sonia Gandhi's letter to  PM Modi on funding of COVID-19 fight

பாஜகவை பொறுத்தவரை, அக்கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருப்பது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு என்றும் அந்த சர்வே கூறுகிறது. அதை இன்னும் 3 மாதங்களுக்குள் மத்திய பாஜக அரசு சரி செய்துவிட்டால் எதிர்க்கட்சிகளால் 2024-ல் மோடி அரசை வீழ்த்துவது மிகவும் கடினமான செயலாகி விடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Sonia Gandhi chairs meeting with 18 opposition parties, AAP, SP, BSP  missing - The Statesman

2 வருடங்களாகியும் கட்சிக்கு முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் திண்டாடி வருகிறது. இது நீடித்தால் அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலின்போது ஒன்று சேருமா? அல்லது அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைபோல சிதறி விடுமா? என்பது தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியவரும்!

Views: - 326

0

0