நிவர், புரெவி புயல் பாதிப்பிற்கான நிவாரணம் : நில உச்சவரம்பை தளர்த்தி அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி..!!

1 February 2021, 12:42 pm
eps - rain - updatenews360
Quick Share

சென்னை : புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இடுபொருள் நிவாரணம் வழங்கும் உச்சவரம்பை தளர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் மற்றும் புரெவி புயலால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சேதடைந்த பாலங்கள், சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சேதமடைந்த வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இடுபொருள் நிவாரணம் வழங்கும் உச்சவரம்பை தளர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிவர்” மற்றும் “புரெவி” புயல்களின் தாக்கத்தினால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற உச்சவரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளேன்,” எனத் தெரிவித்தார்.

Views: - 24

0

0