மணிகண்டன் மரணத்தில் நீடிக்கும் மர்மம்… தமிழக அரசு இதை செய்தே ஆக வேண்டும் : தீர்வுக்கு வழி சொல்லிய விஜயகாந்த்..!!

Author: Babu Lakshmanan
9 December 2021, 4:27 pm
vijayakanth - updatenews360
Quick Share

மாணவர் மணிகண்டன் மரணத்தில் நீடிக்கும் மரணத்தை கலைந்து உண்மையை வெளியே கொண்டு வர தமிழக அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் அருகே வாகன சோதனையின் போது பைக்கை நிறுத்தாமல் சென்றதாகக் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் மணிகண்டனை கடந்த டிச.,4ம் தேதி மாலை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே மாணவனை அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காவல்நிலையத்தில் மணிகண்டனை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் பெற்றோரை வரவழைத்து மாணவனை அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

manikandan cctv - updatenews360

இதையடுத்து, வீட்டிற்கு சென்ற மணிகண்டன் நள்ளிரவு வீட்டில் ரத்த வாந்தி எடுத்ததோடு, உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் கட்டுப்பாட்டு விசாரணையில் இருந்த மாணவன், வீடு திரும்பியதும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாணவர் மரணத்தில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனை விரட்டி பிடித்த போலீசார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

vijayakanth-updatenews360

விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் நடக்கக் கூட முடியாத நிலையில் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை ரத்த வாந்தி எடுத்த மணிகண்டன், காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்ததாலேயே மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் மாணவர் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

எனவே, மாணவர் மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, மணிகண்டன் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவேற்கிறது, என தெரிவித்துள்ளார்.

Views: - 268

0

0