சென்னையில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு: பதிவேற்றத்தில் தவறு….சுகாதாரத்துறை விளக்கம்..!!

23 June 2021, 8:13 pm
Quick Share

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததற்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சையில் 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரித்ததாக செய்தி வெளியானது. பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்து உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்திருந்தது.

chennai corona - updatenews360

இந்நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து, இதற்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

வீட்டு தனிமையில் இருந்த 2012 பேர் குணமடைந்து விட்டதாக தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டது தான் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 154

0

0