கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை… ரூ.95 கோடியில் காய்கறி தோட்டம் திட்டம்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 August 2021, 11:26 am
agri budget -5- updatenews360
Quick Share

தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே வேளாண்மைக்கு என தனிபட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் வெளியிட்ட உரையில் கூறியிருப்பதாவது :- தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது வேளாண் வணிகர்களையும் கருத்துக்கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் மனித நாகரீகம் பன் மடங்கு வளர்ந்தாலும் உணவின்றி உயிர்வாழ இயலாது

சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு

உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு

தென்னை சாகுபடி திட்டத்திற்கு ரூ.10.20 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகம்

முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்திற்கு ரூ.95 கோடி நிதி

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் அல்லது இடுபொருட்கள் வழங்கப்படும்

ரூ. 982.48 கோடி செலவில் 1.50 லட்சம் ஹெக்டர் பரப்பில் சிக்கன நீர்பாசன திட்டம்

ரூ.1 கோடி செலவில் வடலூர் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்

2 லட்சம் குடும்பங்களுக்கு 16 கோடி லட்சம் மூலிகைச் செடிகள் வழங்கும் திட்டம் ரூ.2.18 கோடி

தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் திட்டத்திற்கு ரூ.12.50 கோடி

விவசாயிகளுக்கு 7,106 வேளாண் எந்திரங்கள் வழங்க மற்றும் 193 வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் ரூ.140 கோடி

விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேளாண் இயந்திரங்கள் ரூ.23 கோடியில் கொள்முதல் செய்யப்படும்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு – ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2,750ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிப்பு

ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு கரும்பு விவசாயிகளின் வங்கிகளில் ஊக்கத்தொகை செலுத்தப்படும்

கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும்

கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும்

விவசாயிகள் புதிய வகை கரும்பு வகைகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு

Views: - 273

0

0