மொஹரம் ஊர்வலமா..? முடியாது..முடியாது… உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

27 August 2020, 4:42 pm
Supreme Court Eases March 31 Deadline For Sale of BS4 vehicles
Quick Share

டெல்லி : மொஹரம் பண்டிகையையொட்டி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பாதிப்புகளை பொறுத்து தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியும் உள்ளது. அதிலும், குறிப்பாக, மதம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சையது கல்பே ஜாவத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட மத ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியளிக்க முடியாது. மீறி அனுமதியளிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட மதத்தினர் மீது மட்டுமே தொற்று பரவலுக்கு காரணம் எனக் குற்றச்சாட்டு வைக்க நேரிடும். பூரி ஜெகன்நாத் கோவில் யாத்திரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொண்டாடப்படக் கூடியது என்பதால் அனுமதியளித்தோம். ஆனால், நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவாக அனுமதி கேட்கிறீர்கள். மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் துணிந்து முடிவெடுக்க முடியாது , என நீதிபதிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, லக்னோவிலாவது மொஹரம் ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முறையீட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முன் வைக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Views: - 26

0

0