எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார்: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!!

By: Aarthi
12 October 2020, 1:15 pm
Supreme_Court_of_India_UpdateNews360
Quick Share

சென்னை: எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியானது. எந்திரன் திரைப்படத்தின் கதை ஜூகிபா என்ற கதை திருடப்பட்டு அமைக்கப்பட்டிருப்பதாக, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கலாநிதிமாறன் மற்றும் இயக்குநர் ஷங்கர் மீது புகார் அளித்திருந்தார்.

shankar - updatenews360

1996ல் தான் எழுதிய கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என்பதால் இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த வழக்கை எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீதும் தொடுத்திருந்தார்.

இதனையடுத்து, இயக்குநர் ஷங்கர் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர், நாங்கள் கதையை திருடவில்லை, எனவே அந் வழக்கு செல்லாது என உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முறையிட்டனர். பலகட்ட விசாரணைக்கு பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டிருந்தது.

aarur.tamilnaadan - updatenews360

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில், இயக்குனர் சங்கர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயக்குனர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Views: - 51

0

0