நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பு..!

14 August 2020, 1:50 pm
prasanth bhusan - updatenews360
Quick Share

டெல்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்த தொழிலளார்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் போது எதிர்கொண்ட இன்னல்கள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. ஆனால், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் கடந்த 27ம் தேதி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டுவிட் போட்டுள்ளார்.

இதனையடுத்து பிரசாந்த் பூஷன் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம், அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், இன்று அவரை குற்றவாளி என அறிவித்தனர். மேலும், இவருக்கான தண்டனை விபரம் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 2

0

0