சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்: மத்திய சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு…!!

5 April 2021, 12:19 pm
cleaning workers - updatenews360
Quick Share

புதுடெல்லி: சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாட்டில் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன் பின்னர், 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது, 45 வயதுக்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்கிடையே, தடுப்பூசி மையங்களில் அரசின் வழிகாட்டுதல்களை மீறி முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் பெயரில் தகுதியில்லாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக மத்திய சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், சுகாதாரத் துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சமீப காலமாக தடுப்பூசி மையங்களில் அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு சுகாதாரத்துறையினர் என பலருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களில் தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரத்துறையினர் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சுகாதாரத்துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவர்களில், ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 22

0

0