தமிழகத்தில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்!!

18 September 2020, 11:24 am
Quick Share

சென்னை : குழு அளித்த அறிக்கையில் அடிப்படையில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மாணவர்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, குழு அளித்த அறிக்கையில் அடிப்படையில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த நீட் தேர்வில் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும், அதை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் விதமாக, பாடத்திட்டத்தை உருவாக்குவோம்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை, எனக் கூறினார்.