“இதென்ன சர்க்கஸ் கூடாரமா?”: அரைநிர்வாணமாக ஆஜரான நபர்…கடுப்பான நீதிபதி..!!

Author: Rajesh
11 November 2021, 10:59 am
Quick Share

கொச்சி: உயர்நீதிமன்றத்தின் வீடியோ கான்பரன்ஸிங் விசாரணையின் போது சட்டை அணியாமல் கலந்து கொண்ட நபரை நீதிபதி கடுமையாக திட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்தின் கொச்சி உயர்நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையில் வழக்கு விசாரணையானது வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்றது.

வழக்கு விசாரணையில் பலர் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் மேல்சட்டை அணியாமல் விசாரணையில் உட்காந்திருப்பதை நீதிபதி கவனித்துள்ளார். உடனே, ‘இதென்ன சர்க்கஸ் கூடாரமா…இல்ல சினிமா கூடாரமா’…நீதிமன்றத்திற்கான உரிய மரியாதையை தராவிட்டால் முறைகேடாக ஆஜரானவரை வழக்கு விசாரணையில் இருந்து ஒதுக்கி வைக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் தாமாகவே, வீடியோ கான்பரஸிங் விசாரணையில் இருந்து வெளியேறினார்.

Views: - 498

0

0