5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் தாஜ்மஹால் : மத்திய அரசின் அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

8 September 2020, 10:55 am
v
Quick Share

டெல்லி : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வைக்கு திறந்து விடும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், பொதுப் போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்டவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடியே கிடக்கிறது. நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டிருப்பதால், சுற்றுலாத்துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, 4வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில், படிப்படியாக மேலும் பல்வேறு தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களான தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை ஆகியவற்றை வரும் செப்.,21ம் தேதி முதல் திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுற்றுலா வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தாஜ்மஹாலில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி, பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தாஜ்மஹால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Views: - 0

0

0