இனி தனிநபர் கட்டுப்பாட்டில் யானை வைத்திருக்க கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…காரணம் தெரியுமா?

Author: Aarthi Sivakumar
24 September 2021, 3:35 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் இனி யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யானைகள் நலன் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு பதில்

யானையை வைத்து சர்க்கஸ் காட்டுவது, யானையை ஆசிர்வதிக்க வைத்து பணம் பெறும் நபர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாய் அமைந்துள்ளது. கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசசுக்கு உயர்நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது. வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டனர்.

இனிமேல் "யானைகளை" தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது - ஐகோர்ட்  உத்தரவு


மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள், அரசுக்கு உத்தரவிட்டனர்.

Views: - 153

0

0