தமிழக பட்ஜெட் 2021 – 22 தாக்கல்: பேச வாய்ப்பளிக்காததால் அதிமுக வெளிநடப்பு..!!
Author: Aarthi Sivakumar13 August 2021, 10:36 am
பட்ஜெட் உரைக்கு முன்னதாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர், பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல்நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியவுடன் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு பேச வாய்ப்பளிக்கப்படும் என அவைத் தலைவர் தெரிவித்தார்.
இதன் மூலம் திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்துள்ளது.
Views: - 253
0
0