இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழகம்…முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சிக்கு 3வது முறையாக மணிமகுடம்…!!

27 November 2020, 2:00 pm
cm on ppl - updatenews360
Quick Share

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் சிறந்த நிர்வாகம், முதலீட்டை ஈர்ப்பதில் முதலிடம், நீர்மேலாண்மையில் முதலிடம் என பல விருதுகளை எடப்பாடியார் தலைமையிலான அரசு குவித்து வருகிறது. இந்நிலையில், மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக சிறப்பான விருதை பெற்றுள்ளது. இந்தியா டுடே கருத்து கணிப்பில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

வரும் 5ம் தேதி நடைபெற உள்ள இந்தியா டுடே ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் விருதுகள் 2020 விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விருது பெற்றவர்களின் பட்டியலை அந்த நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. நீர் மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் தமிழக முதல்வருக்கு கடிதமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.

இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்! என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே, நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கான தேசிய விருது பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது.

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதில் தமிழக மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக கேர் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக அனைத்து துறைகளிலும் முதலிடத்தையும், சிறந்த விருதுகளையும் அள்ளிக்குவித்து வருவதால், அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 0

0

0