புயலாக மாறும் புதிய காற்றழுத்தம்: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கா? இல்லையா?…வெதர்மேன் சொன்ன ரிப்போர்ட்..!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 11:08 am
Quick Share

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்லடலம் காரணமாக கனமழை பெய்தது. இந்த மழையால் திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளக்காடாக மாறியது.

புயலாக மாறினால்

சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 3ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இது மேலும் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இது புயலாக மாறினால் ஜாவத் என சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், புதிய புயல் சின்னம் தமிழகத்திற்கானது அல்ல. அது வேறு பகுதிக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இருப்பினும், தமிழகத்தில் ஆங்காங்கே மழைப்பொழிய வாய்ப்புள்ளது. அப்படியே பெய்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

Views: - 226

0

0