உயர்ந்து கொண்டே செல்லும் எண்ணிக்கை..! மேலும் 3 பேருக்கு கொரோனா..! விஜயபாஸ்கர் அறிவிப்பு..!

25 March 2020, 11:58 pm
Vijayabashkar_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு, தற்போது உலகம் முழுவதும் ஆட்டுவித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4,54,942 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20,547 பேர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் 23 பேர் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்த மூன்று பேரில் 18 வயது இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், துபையிலிருந்து திரும்பி வந்த 63 வயது ஆண்  வாலாஜா மருத்துவமனையிலும், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 66 வயது ஆண் பெருந்துறை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரின் நிலையம் நன்றாக உள்ளதாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.