தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணிக்குழுவை நியமித்தது காங்கிரஸ்..!!!

2 March 2021, 8:10 pm
Quick Share

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்குழுவை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்.,6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்குழுவை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணிக்குழுவின் தலைவராக திக்விஜய் சிங்கும், உறுப்பினர்களாக பிரான்சிஸ்கோ சர்டின்ஹா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தினேஷ் குண்டுராவ், கேஎஸ் அழகிரி, ஏவி சுப்ரமணியன், கேஆர் ராமசாமி, வி. நாராயணசாமி மற்றும் தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 13

0

0