முதல்நாளில் 47 பேர் வேட்புமனு தாக்கல் : ஓபிஎஸ், நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் வேட்பு மனு!!!

Author: Babu Lakshmanan
12 March 2021, 7:53 pm
OPS nomination - - updatenews360
Quick Share

தேனி : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் முதல் நாளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 47 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த தொகுதி பங்கீடு மற்றும் ஒதுக்கீட்டு பணிகள் முடிந்து முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வருவதற்கு 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் ஆளாக வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல, கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்சி சம்பத்தும், நெல்லையில் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களை கொடுத்தனர்.

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று மொத்தம் 47 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Views: - 168

0

0