தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது..!!!

26 February 2021, 11:52 am
election commission updatenews360
Quick Share

புதுடெல்லி: தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் குழுவினர், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நேரில் ஆய்வு செய்து வந்தார்.

அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை வெளியிட இருக்கிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Views: - 9

0

0