சட்டப்பேரவையில் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு : பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்… முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

Author: Babu
2 August 2021, 8:06 pm
Cm stalin - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், ஜார்ஜ் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார். அப்போது, ஏழை மக்களுக்காக போராடிய வழக்கறிஞராக இருந்த தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பது சிறப்பு வாய்ந்தது என்றும், சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி என அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். அந்தப் புகைப்படத்தில் யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும், படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு இருக்கிறது. மகளிருக்கான பல்வேறு திட்டங்கள், புரட்சிகரமான தீர்மானங்களும் இந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

Views: - 237

0

0