வரும் செப்.,21ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் : ஆக.,23க்கு பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த முடிவு

Author: Babu Lakshmanan
10 August 2021, 12:31 pm
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டம் செப்., 21ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதற்காக அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், வரும் 13ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் செப்.,21ம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆக.,23ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிகழ்ச்சி பற்றி விபரம் பின்வருமாறு :-

Views: - 360

0

0