சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரை 4 நாட்கள் நடத்த தமிழக அரசு திட்டம்..!

1 September 2020, 12:57 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரை 4 நாட்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேரவை விதிகள்படி ஆண்டுக்கு 2 முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கையும், மே, ஜூன் மாதங்களில் மானிய கோரிக்கை விவாதமும் நடத்தப்படும்.

இந் நிலையில், இந்த ஆண்டு மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 9ல் ஆரம்பித்து ஏப். 9 வரை நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 24-ம் தேதிக்குள் அவசர அவசரமாக கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டும் என்பதால், அதன் படி செப். 24க்குள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும். எனவே, செப். 23க்குள் கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரை 4 நாட்களுக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத் தொடரின் போது, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல், கொரோனா பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் 110 விதியின் கீழ முதலமைச்சரின் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0