ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை : முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

6 July 2021, 8:25 pm
Cm stalin - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டோக்கியோவில் வரும் 23ம் தி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்பேற்பதற்காக 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. அதில், கலப்பு 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு வீரர்களும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Views: - 97

1

0