‘ஒன்றியம்’ என்பது பிரிவினைவாத போக்கின் உள்நோக்கம் : திமுகவைக் கண்டித்து பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

Author: Babu
25 June 2021, 5:38 pm
bjp meeting - updatenews360
Quick Share

மத்திய அரசை ஒன்றியம் என அழைக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில், தமிழக பாஜக தனது முதல் செயற்குழு கூட்டத்தை கூட்டியது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் வலிமையை மேலும் அதிகப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதோடு, பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொரோனாவை திறம்பட கையாண்டு வரும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பணி சிறக்கவும், அதேபோல அதற்காக பணியாற்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

‘ஒன்றியம்’ என்கிற சொல்லை திமுக பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காகவும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மாணவர்களுக்கு அதிக பயன் அளிக்கக்கூடிய நீட் தேர்வில் மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகளுக்கு கண்டித்தும், கோவில் நில ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் இந்து பள்ளிகளை அவமானப்படுத்துவதை கண்டித்தும் பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Views: - 193

0

0