வேளாண்துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு : 7 மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்கள்..எடப்பாடி அரசு அதிரடி அறிவிப்பு!

14 February 2020, 12:50 pm
Farmer- updatenews360
Quick Share

தமிழக அரசின் 2020 – 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள், அணைகளை தூர்வாரவும், மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயம், பாசனம், அணைகள் மற்றும் மீனவர்கள் சார்ந்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :-

உணவு மானியம் ரூ. 6,500 கோடி

வேளாண்துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ. 75 கோடி ஒதுக்கீடு

அதிகாரிகள் – விவசாயிகளை இணைக்க உழவர் – அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்

புதிதாக 45 உழவர் – உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ. 724 கோடியாக உயர்வு

திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ. 724 கோடியாக உயர்வு

சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ரூ. 218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகை, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்கள் நிறுவப்படும்

டன் ஒன்றுக்கு ரூ. 100 என்கிற வீதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ. 110 கோடி

நீர்பாசனம் மற்றும் நீர்வள ஆதார துறைக்கு ரூ. 6,991 கோடி ஒதுக்கீடு

ரூ. 1,845 கோடியில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப்பாசன வசதி பெறும்

1,364 நீர்பாசனப் பணிகள் ரூ. 500 கோடி செலவில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும்

ரூ. 500 கோடி மதிப்பில் 1,364 நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல், முதனிலை பணிகளுக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு

ரூ. 230 கோடி நொய்யல் துணை படுகை திட்டத்திற்கு அனுமதி

அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டு திட்டத்தின் 2-ம் கட்டத்தில் 37 அணைகள் சேர்ப்பு

அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டு திட்டத்தின் கட்டங்களுக்கும் ரூ.220 கோடி ஒதுக்கீடு

புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க ரூ. 655 கோடி ஒதுக்கீடு

மீதமுள்ள கிராமங்கள், குளங்கள் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புனரமைப்பு செய்யப்படும்

காவிரி பாசனப் பகுதிகளில் ரூ. 1,560 கோடி செலவில் பருவ நிலை மாற்றத் தழுவல் திட்டம்

கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் வடிகால்கள் சீரமைக்க ரூ. 5,439 கோடி ஒதுக்கீடு

ரூ. 25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைக்கப்படும்

மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும சாரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு ரூ. 350 கோடி ஒதுக்கீடு

ரூ. 610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ. 220 கோடி ஒதுக்கீடு

ரூ. 2,962 கோடி செலவில் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்

906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டு பகுதிகளை சீரமைக்க ரூ. 583 கோடி ஒதுக்கீடு

ரூ. 700 கோடியில் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்

புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க ரூ. 655 கோடி ஒதுக்கீடு

கொசஸ்தலை ஆற்றின் வடிநில பகுதியில் செயல்படுத்த ரூ. 2,518 கோடியில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டம் தயாரிப்பு

கால்நடைத்துறைக்கு ரூ. 199 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு ரூ. 1,229 கோடி ஒதுக்கீடு

2,000 இழுவலை மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றப்படும்

நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம்

ரூ. 235 கோடியில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் , செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்

மீனவர்களுக்கான மீன் பிடித்தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ. 298 கோடி ஒதுக்கீடு

4,997 படகுகளில் ரூ. 18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்