தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்..! கல்வி, வேலைவாய்ப்புத் துறையிலும் எடப்பாடி அரசின் பட்ஜெட் டாப்..!

14 February 2020, 1:57 pm
education - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் ரூ. 1,200 கோடி மதிப்பில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து சுமார் 3.15 நிமிடங்கள் இருந்த அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. விவசாயம், கல்வி, நிர்வாகம், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகள் மற்றும் விவகாரங்களில் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

கல்வித்துறையை பொறுத்தவரையில், பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 34,841 கோடியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.

கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை மேம்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :

11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவ ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று, கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியாக செயல்படும்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 76,927 மாணவர்கள் தனியார் பள்ளியில் அனுமதி

படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,018.39 கோடி ஒதுக்கீடு

11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கும், மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மாணவர் – ஆசிரியர் விகிதம் கட்டாய கல்வி சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தை காட்டிலும் போதுமான அளவில் உள்ளது

உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தொகை ரூ. 1,526.46 கோடியை எட்டியுள்ளது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ. 218 கோடி ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன

பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது

சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி, திருச்சி, ஒசூர், காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது

கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி சிறப்பு மானியம் அளிக்கப்படும்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

சென்னையில் மாநில திறன் பயிற்சி நிலையம் ரூ. 1.60 கோடியில் உருவாக்கப்படும்

சேலம் – புத்திரகவுண்டம்பாளையத்தில் ரூ. 4.50 கோடியில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும்

சென்னை – பெங்களூரூ தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்தில் 21,000 ஏக்கரில் தொழில் முனையம்

ஹார்வார்டு, ஹுஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டு வர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன

அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,450 கோடி ஒதுக்கீடு

5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்

தமிழகம் முழுவதும் 16 போஸ்கோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன

அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிநியமனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை

நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படும், உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.