ரூ.52,257 கோடி முதலீடு… 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு… அதிரடி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி..!!

29 January 2021, 8:32 pm
cm at tuticorin - updatenews360
Quick Share

சென்னை : பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் ரூ. 52,257 கோடி புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 34 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 93,935 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையான தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ஐ வெளியிட தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைபேசி உதிரியாக உற்பத்திக்காக டாட்டா எலக்டிரானிக்ஸ் ரூ.5,763 கோடி முதலீடும், சன் எடிசன் நிறுவனம் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதிகள் உற்பத்திக்காக ரூ.4,629 கோடி முதலீடுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “ரூ.52,257 கோடி முதலீடு… 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு… அதிரடி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி..!!

Comments are closed.