அடுத்தடுத்த கனமழை எச்சரிக்கை… துவண்டு போன சென்னை : தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

Author: Babu Lakshmanan
18 November 2021, 12:49 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை : சென்னைக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாடு அரசின்‌ அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நாளை மாலை 5.00 மணியளவில்‌ கூட்டப்படும்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்‌, தற்போது தமிழகத்தின்‌ சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால்‌ விடுக்கப்பட்டுள்ளதால்‌, மேற்படி மாவட்டங்களில்‌ அமைச்சர்‌ பெருமக்கள்‌ நிவாரணப்‌ பணிகளில்‌ ஈடுபடமுதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அவர்கள்‌ பணித்துள்ளார்கள்‌.

இதன்‌ காரணமாக நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக்‌ கூட்டம்‌ ஒத்தி வைக்கப்பட்டு, நாளை மறுநாள் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்‌, என தெரிவிக்கப்படுகிறது.

Views: - 263

0

0