தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் : தமிழக அரசு தகவல்

Author: Babu Lakshmanan
8 September 2021, 2:02 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின்‌ கீழ்‌ மானியக்‌ கோரிக்கைகள்‌ மீதான விவாதம்‌ இன்று நடந்தது. அப்போது, பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில்‌ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து சமுதாய மக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 315

0

0