முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டிய முதலமைச்சர் பழனிசாமி : மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண்..!!! (வீடியோ)

11 November 2020, 1:22 pm
Cm - help - updatenews360
Quick Share

கொரோனா ஆய்வின் போது மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பணி ஆணை வழங்கி சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

நேற்று கன்னியாகுமரியில் கொரோனா ஆய்வு பணிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, ரூ.328.40 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும், முடிவடைந்த திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனு கொடுப்பதற்காக காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணைக் கண்டதும் காரை நிறுத்துமாறு கூறினார். பின்னர், அவரை காரின் அருகே அழைத்து குறைகளை கேட்டார். அப்போது, தான் முத்தையா புரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி எனவும், தனது கணவர் கூலித் தொழிலாளி என்பதால், போதிய வருமானம் இல்லாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், எனவே அரசு வேலை வேண்டும் என வலியுறுத்தி மனுவை அவர் அளித்தார்.

இதைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விட்டு சென்ற முதலமைச்சர், 2 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, மாதம் ரூ.15 ஊதியம் கிடைக்கும் மருத்துவமனை வார்டு மேலாளர் பதவிக்கான ஆணையை வழங்கினார்.

மாற்றுத்திறனாளியின் துயரத்தை அறிந்து உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Views: - 30

0

0