முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

Author: Babu
14 October 2020, 12:45 pm
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இதைத் தொடர்ந்து, சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, சடங்குகளுக்கு பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு செய்தி அறிந்ததும் மிகுந்த மனவேதனை அடைந்ததாக இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 65

0

0