தொல்லியல் படிப்புக்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி இணைப்பு : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..!

9 October 2020, 12:46 pm
TN_CM_EPS_UpdateNews360
Quick Share

டெல்லி: மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வி தகுதியில் தமிழ்மொழியை இணைத்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ்மொழியையும் சேர்க்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்து.

இந்த நிலையில், இந்திய தொல்லியல்துறை பட்டயபடிப்பில் தமிழ்மொழியை இணைத்ததற்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழை சேர்த்தமைக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 43

0

0