கொரோனாவால் ஸ்தம்பிக்கும் தமிழகம் : வெளிநாடுவாழ் தமிழர்கள் உதவ வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை..!!

13 May 2021, 2:54 pm
stalin cm - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் நிலைகுலைந்து வரும் தமிழகத்திற்கு, வெளிநாடுவாழ் தமிழர்கள் நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது :- உலகத் தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி என இரண்டு நெருக்கடியைத் தமிழகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள், மருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மக்கள் வழங்கும் நிதி கொரோனா தடுப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மக்கள் தங்களைத் தாங்களே காக்கும் பணியில் முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் அளிக்கும் நிதி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்கள் வழங்கும் நிதிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட உதவிக்கரம் நீட்டுங்கள். தனக்காக மட்டும் வாழாமல், ஊருக்காக, உலகத்துக்காக வாழும் உங்கள் முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், எனக் கூறியுள்ளார்.

Views: - 161

0

0