தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஆளுநர் : 7ம் தேதி பதவியேற்பு

5 May 2021, 7:59 pm
stalin - governor - updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி, இன்று காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அவர் கொடுத்தார். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, ஸ்டாலினை முதலமைச்சராக ஏற்று, புதிய அமைச்சரவை பதவியேற்க வருமாறு முறைப்படி அவர் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கும் முக ஸ்டாலின், அன்றைய மாலை கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Views: - 136

0

0