இந்தியக்‌ கடல்சார்‌ மீன்வள மசோதாவை தாக்கல் செய்யாதீர்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

20 July 2021, 9:35 pm
stalin cm - updatenews360
Quick Share

சென்னை : இந்திய மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதிக்கும்‌ இந்தியக்‌ கடல்சார்‌ மீன்வள மசோதா, 2021-ஐ, நாடாளுமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்ய வேண்டாம்‌ என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- நாடாளுமன்றத்தின்‌ நடப்புக்‌ கூட்டத்‌ தொடரின்போது மத்திய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்தியக்‌ கடல்சார்‌ மீன்வள மசோதா 2021, “இந்திய மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதிக்கும்‌ வகையில்‌ உள்ளதால்‌, அதனை நாடாளுமன்றத்தில்‌ முன்மொழிய வேண்டாமென்று வலியுறுத்தி, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்தியக்‌ கடல்சார்‌ மீன்வள மசோதாவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விதிகள்‌, கடலோர மீனவர்‌ சமூகங்களின்‌ நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும்‌, இந்திய அரசியலமைப்பின்‌ 7-வது அட்டவணையின்‌ மாநிலப்‌ பட்டியலின்கீழ்‌ மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும்‌ சில உட்பிரிவுகளைக்‌ கொண்டுள்ளதாகவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 73

0

0

Leave a Reply