தமிழகத்தில் 23ம் தேதி முழு ஊரடங்கு… சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 January 2022, 4:04 pm

சென்னை : தமிழகத்தில் கொரோனா நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த வரும் 23ம் தேதி முழு ஊரடங்கை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌, கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ அரசு ஆணை எண்‌.30 வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை, நாள்‌ 12-1- 2022-ன்படி, கடந்த 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில்‌ கொரோனா – ஒமைக்ரான்‌ வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவல்‌ அதிகரித்து வரும்‌ சூழ்நிலையில்‌, பொது மக்கள்‌ நலன்‌ கருதி தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ எதிர்வரும்‌ 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்‌.

இந்த முழு ஊரடங்கு நாளில்‌ கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின்‌ போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள்‌ அனுமதிக்கப்படும்‌ தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள்‌ தொடரும்‌.

மேலும்‌, வெளியூர்களிலிருந்து வரும்‌ பயணிகளின்‌ நலன்‌ கருதி, சென்னை சென்ட்ரல்‌, எழும்பூர்‌ இரயில்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ கோயம்பேடு பேருந்து நிலையம்‌ போன்ற இடங்களில்‌ வழக்கமான ஆட்டோக்கள்‌, செயலி மூலம்‌ முன்பதிவு செய்து இயக்கப்படும்‌ வாடகை கார்கள்‌ பயணிகளை ஏற்றிச்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மாவட்ட இரயில்‌ நிலையங்களுக்கும்‌ மற்றும்‌ வெளியூர்‌ பேருந்து நிலையங்களுக்கும்‌ இது பொருந்தும்‌.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக்‌ காத்திட அரசு மேற்கொள்ளும்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • rajinikanth coolie chikitu song surprise video released ரஜினிகாந்துடன் நடனமாடப்போகும் மாஸ் நடிகர்? சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட கூலி படக்குழு!