தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 5,684…. டிஸ்சார்ஜ் 6,272…!

6 August 2020, 7:19 pm
coronavirus_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இன்றும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்து, 5,684 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 6 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்த வந்த 36 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 4,571ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,272 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 087 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 13

0

0