14வது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு..! தமிழக கொரோனா நிலவரம்..!

12 August 2020, 6:28 pm
Thiruvallur 23 person corona conform
Quick Share

சென்னை : தமிழகத்தில் 14வது நாளாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே நீடித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 5,871 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 993 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,633 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 8

0

0