நாளுக்கு நாள் கட்டுக்குள் வரும் தமிழக கொரோனா : 2வது நாளாக 5,000க்கு கீழ் குறைந்தது பாதிப்பு

Author: Babu
13 October 2020, 6:45 pm
Cbe Coronaa- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக இன்றும் 5 ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 6 ஆயிரத்திற்கு மிகாமல், பாதிப்பு எண்ணிக்கை ஒரே நிலையை எட்டியிருந்தது.

40 நாட்களுக்கு பிறகு தமிழக கொரோனா எண்ணிக்கை நேற்று 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 4,666 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,371 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5,117 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 49

0

0