தமிழகத்தை விட்டு படிப்படியாக விலகும் கொரோனா : 4வது நாளாக 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு

Author: Babu
15 October 2020, 6:15 pm
Corona_Virus_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 4வது நாளாக இன்றும் 5 ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 6 ஆயிரத்திற்கு மிகாமல், பாதிப்பு எண்ணிக்கை ஒரே நிலையை எட்டியிருந்தது.

40 நாட்களுக்கு பிறகு தமிழக கொரோனா எண்ணிக்கை நேற்று முன்தினம் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், 4வது நாளாக இன்றும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 4,410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,472 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5,055 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 44

0

0