ஒரு வாரமாக 2 ஆயிரத்திற்கு குறைவான பாதிப்புகளே : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!!

19 November 2020, 6:46 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 7வது நாளாக 2 ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

படிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வந்தது. இந்த நிலையில், இன்றும் 1,707 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,989 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,550 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,251 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 28

0

0