தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்குள் வரும் கொரோனா பலி…! டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..!

4 September 2020, 6:22 pm
trichy corona Test -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 4.50 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக ஒரே நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், இன்று 5,976 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்த 25 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 7,687 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,334 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 9

0

0