தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு பாதிப்பு : இதுவரை இல்லாத அளவில் 119 பேர் பலி..!

7 August 2020, 6:11 pm
coronavirushealthoffcials_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, இன்றும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்து, 5,880 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும், வெளி மாநிலங்களில் இருந்த வந்த 23 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 984 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,488 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது.

Views: - 0

0

0