உச்சத்துக்கு போன கொரோனா பலி…! தமிழகத்தில் இன்று மட்டும் 112 பேர் உயிரிழப்பு

5 August 2020, 8:49 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 112 பேர் பலியாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் இன்னும் உச்சக்கட்டத்தில் பரவி வருகிறது கொரோனா வைரஸ். தொற்று பாதிப்பு, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னோக்கி செல்ல, பிரேசில் 2ம் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள், பலி எண்ணிக்கை என்று தினமும் கொரோனா தாக்குதல் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. எப்படியாவது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் துரித கதியில் உள்ளன.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 5,175 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

இதையடுத்து மொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,73,460 என உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் சற்று குறைவாக 1,044 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,05,004 ஆகும். பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்று 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்திருக்கிறது. 2,14,815 பேர் குணமடைந்து இருந்தாலும் 54,184 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 4

0

0