கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் No தளர்வுகள்… 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி..!!

20 June 2021, 1:51 pm
Theni Curfew -Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில்‌ ஊரடங்கு சில தளர்வுகளுடன்‌ 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, இந்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, ஊரடங்கு சில தளர்வுகளுடன்‌ நடைமுறையில்‌ இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌ என மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ பொருட்டு, அனைத்துக்‌ கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‌, மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுடன்‌ தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின்‌ அடிப்படையில்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும்‌, இந்த ஊரடங்கு வரும்‌ 21-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, 19-6-2021 அன்று மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுடன்‌ நடத்தப்பட்ட ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்‌ அடிப்படையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த ஊரடங்கை
28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன.

மேலும்‌ மாவட்டங்களில்‌ உள்ள நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌, மாவட்டங்கள்‌ பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 – (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌

வகை 2 – (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.

வகை 3 – (4 மாவட்டங்கள்‌)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ மட்டும்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

23 மாவட்டங்களில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

மளிகை, காய்கறிகள்‌, இறைச்சி விற்பனை ‌கடைகள், நடைபாதை கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை அனுமதி

இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ அனைத்தும்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9 வரை இயங்கலாம்‌

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி

அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌ 100% பணியாளர்களுடனும், இதர அரசு துறைகள் 50% பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்‌.

சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதி

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதி

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரிப்பு நிறுவனங்கள்‌ 100 % பணியாளர்களுடன்‌ இயங்கலாம்

எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர்‌, மெக்கானிக் ஷாப், வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை கடைகள் காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள், காலணிகள், கண்கண்ணாடி, மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணி வரை இயங்கலாம்

மிக்சி, கிரைண்டர் வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள், செல்போன் மற்றும் அதனைச் சேர்ந்த கடைகள் காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணி வரை இயங்கலாம்

மின்‌ பணியாளர், பிளம்பர்கள்‌, கணினி இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர் மற்றும்‌ தச்சர்‌ போன்றோர் காலை 6 மணி முதல்‌ மாலை 5 மணி வரை இ-பதிவுடன்‌ அனுமதி

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 910மணி முதல்‌ மாலை 5.ப்‌ மணி வரை செயல்பட அனுமதி – அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகளுக்கு‌ அனுமதி

பள்ளி கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப்‌ பணிகள்‌ அனுமதி

காலை 6 மணி முதல்‌ மாலை 5மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கலாம். பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌ திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தலாம்

திரையரங்குகளில்‌ தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி

டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதி. மேலும்‌ வாடகை டேக்ஸிகளில்‌ ஒட்டுநர்‌ தவிர 3 பயணிகளும்,‌ ஆட்டோக்களில்‌ ஒட்டுநர்‌ தவிர 2 பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதி

வீட்டு வசதி நிறுவனம்‌, வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌, குறு நிதி நிறுவனங்கள்‌ 33 % பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதி

வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில் நேரத்தளர்வுகளும்… அனுமதியும்…

மளிகை, காய்கறிகள்‌, இறைச்சி விற்பனை ‌கடைகள், நடைபாதை கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை அனுமதி

இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ அனைத்தும்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9 வரை இயங்கலாம்‌

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி

குழந்தைகள். சிறார்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லங்கள் மற்றும இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதி

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரிப்பு நிறுவனங்கள்‌ 100 % பணியாளர்களுடன்‌ இயங்கலாம்

இதர தொழிற்சாலைகள் 50 % பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதி

மின்‌ பணியாளர், பிளம்பர்கள்‌, கணினி இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர் மற்றும்‌ தச்சர்‌ போன்றோர் காலை 6 மணி முதல்‌ மாலை 7 மணி வரை இ-பதிவுடன்‌ அனுமதி

சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதி

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதி

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரிப்பு நிறுவனங்கள்‌ 100 % பணியாளர்களுடன்‌ இயங்கலாம்

எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர்‌, மெக்கானிக் ஷாப், வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை கடைகள் காலை 9 மணி முதல்‌ மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி

கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள், காலணிகள், கண்கண்ணாடி, மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல்‌ மாலை 7 மணி வரை இயங்கலாம்

மிக்சி, கிரைண்டர் வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள், செல்போன், ஸ்டூடியோ, பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல்‌ மாலை 7 மணி வரை இயங்கலாம்

டீக்கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி – அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகளுக்கு‌ அனுமதி

பள்ளி கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப்‌ பணிகள்‌ அனுமதி

திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்களோடு நடத்த அனுமதி. படிப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கும் அனுமதி

திரையரங்குகளில்‌ தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி

மாவட்டத்திற்குள்ளும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையேயும் 50 % பயணிகள் அமர்ந்து பயணிக்க பேருந்துகளுக்கு அனுமதி

மெட்ரோ ரயில் போக்குவரத்து 50% இருக்கைகளில் மட்டும்பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதி. மேலும்‌ வாடகை டேக்ஸிகளில்‌ ஒட்டுநர்‌ தவிர 3 பயணிகளும்,‌ ஆட்டோக்களில்‌ ஒட்டுநர்‌ தவிர 2 பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதி

வீட்டு வசதி நிறுவனம்‌, வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌, குறு நிதி நிறுவனங்கள்‌ 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதி

பொது

திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 பற்றும்‌ 3-ல்‌ குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ்‌ பெற்று பயணம்‌ செய்ய அனுமதிக்கப்படும்‌. இதற்கான இ-பாஸ்‌ திருமணம்‌ நடைபெற உள்ள மாவட்டத்தின்‌ மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, திருமண நிகழ்வுகளில்‌ 50 நபர்கள்‌ மட்டும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்‌.

நீலகிரி மாவட்டம்‌, கொடைக்கானல்‌, ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம்‌ பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ்‌ பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌, கூட்டம்‌ கூடுவதையும்‌ தவிர்க்கவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும்‌ அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 215

0

0