90 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்தது..!

30 June 2020, 6:12 pm
cbe Fish Market Corona Test - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கொத்து கொத்தாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 3,000த்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 76 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சத்தீஸ்கரில் இருந்து வந்த 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 90,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்திருப்பதால், மொத்த பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 2,325 பேர் குணமடைந்திருப்பதால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் 50,074 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply